பொங்கொலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புருடோத்தமன் அடி மேல், * வெங்கலி நலியா வில்லி புத்தூர்க்கோன் விட்டு சித்தன் விருப்புற்று * தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நாவுடையார்க்கு * கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக் காமே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.11
இந்த பாசுரம், இந்த பதிகத்தில் உள்ள பாடல்களை படிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களை சொல்லும் பலச்ருதி பாசுரம் ஆகும்.
ஜலத்தின் கொழிப்பால் வந்த கிளர்த்தியை உடைய, கோஷத்தை உடைய, கங்கை கரையில் உள்ளதும், எல்லாவித ஏற்றங்களும் உடையதுமான, இந்த கண்டமெனும்கடி நகரில் நித்ய வாசம் செய்து, எழுந்தருளி இருக்கும் எம் புருஷோத்தமனுடைய திருவடிகளில், கொடிய கலியால் வந்த நலிவு ஒன்றும் இல்லாத, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் விரும்பி நிலை நின்ற அன்பினால் செய்த தமிழ் மாலையான இது ஒருக்காலும் நீங்காதிருக்கிற நாவை உடையவர்களுக்கு கங்கா நதியிலே நீராடி திருமாலின் ஒன்றுக்கு ஒன்று ஒப்பான திருவடிகளின் கீழே நிரந்தர சேவை செய்கிறதாகிய பலன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஜலத்தின் பிரவாகத்தால் உண்டான கொழிப்பும் சப்தமும் கங்கை கரையில் உள்ளன என்றும் சர்வேஸ்வரனுடைய திருவடிகளில் பிறப்பால் வந்த ஏற்றத்தை உடைய கங்கை என்றும் கூறுகிறார்.
Leave a comment