உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடராழியும் சங்கும், * மழுவொடு வாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன் வாழ்வு * எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுதளவினில் எல்லாம், * கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டமென்னும் கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.5
ஏழு ஜன்மங்களிலும் கூடி திரண்ட பாவங்களை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் கழுவி விடும் பெருமையை உடைய கண்டம் என்னும் கடி நகர்; கலப்பையையும் உலக்கையையும் ஸ்ரீ சார்ங்கத்தையும் அழகிய தேஜஸைஉடைய திருவாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் கோடரியையும் ஸ்ரீ நந்தக வாளையும் ஆயுதமாக உடைய சர்வேஸ்வரன் புருஷோத்தமனுக்கு உறைவிடம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கலப்பையையும் உலக்கையையும் ஸ்ரீ சார்ங்கம் என்ற வில்லினையும் அழகிய ஒளிபொருந்திய திருவாழியையும் ஸ்ரீ பாஞ்சசன்யத்தையும் கோடாரியையும், ஸ்ரீ நந்தக வாளையும் தன்னுடைய பக்தர்களின் விரோதிகளை அழிக்கும் ஆயுதங்களாக தானே ஏந்தி கொண்டு அதில் பெருமையும் படும் எம் புருஷோத்தமன் உறையும் இடம் என்கிறார்.
அநேக ஜென்மங்களில் கூடி திரண்ட பாவங்களை எல்லாம் ஒரு நொடி பொழுதில் தன்னுடைய ஜலத்தினாலே கழுவி விடும் பெருமை உடைய கங்கை என்கிறார்.
Leave a comment