இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை * நமபுரம் நணுக நாந்தகம் விசிறு நம் புருடோத்தமன் நகர் தான், * இமவந்தம் தொடங்கி இருங் கடலளவும் இருகரை உலகிரைத்து ஆட * கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.4
இமய மலையின் உச்சி முதல் பெரிய கடல் வரைக்கும் உள்ள உலகத்தில் உள்ளவர் இரண்டு கரையிலும் ஆரவாரித்துக் கொண்டு நீராட அவரவர் பாவங்களைப் பொறுக்கும் பொறை உடைமையால் வந்த பெருமையை உடைய கங்கையின் கரை மேல் கண்டம் எண்ணும் கடி நகர்; இந்திரன் முதலிய தேவர்கள் செருக்குடன் இருந்து ராஜியம் நிர்வகிக்கும்படி என்று கொண்டு வந்து, (அவர்கள் மேலும் அவர்களுக்கு ரக்ஷகனான தன் மேலும் எதிர்ந்து போர் புரிகிற சேனையானது யமபுரத்தை அடையும்படியாக நந்தகம் என்ற வாளை வீசுகின்ற நம்முடைய புருஷோத்தமன் உறையும் இடம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்திரன் போன்ற தேவர்கள் செருக்குடன் அரசாளும்படியாக, அவர்களுக்கும் தனக்கும் எதிராக வரும் சேனைகளை யமலோகம் செல்லும்படி நாந்தகம் என்ற வாளை ஏந்திக்கொண்டு உள்ள, எம் புருஷோத்தமன் உறையும் இடம் என்கிறார்.
ஹிமவானிடத்தில் தொடங்கி, கடலளவும் இரண்டு கரைகளில் புரண்டு ஓடும் நீரில் ஸ்நானம் முதலியவை செய்து தங்களுடைய பாவங்களை போக்கிக்கொள்கிற மனிதர்களுக்கு உதவும் கங்கை என்று அதன் புகழ் பாடுகிறார்.
Leave a comment