சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய, * வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த, * ஓரணி ஓண் தமிழ் ஒன்பதோடு ஓன்றும் வல்லவர், * பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே.
பெரியாழ்வார் திருமொழி 4.6.10
கல்யாண குணங்களை ஆபரணமாக உடையவனாய், அடியவர்களிடம் காதல் கொண்டவனாக இருப்பவனுடைய திரு நாமங்களை தம் தம் பிள்ளைகளுக்கு இடும்படியாக தெளிவித்த இந்திரியங்களை வெல்லுகையாகிற வீரப் பாட்டை ஆபரணமாக உடையவராய் வெகு காலமாக கீர்த்தி உடையவரான பெரியாழ்வார் விவரித்துச் சொன்னதாய் (கற்றவர்களுக்கு) ஒப்பற்ற ஆபரணமாய் தன் பொருளை விளக்குவதாய், தமிழ் மொழியில் பத்து பாடல்களையும் ஓத வல்லவர் பெரிய அழகை உடைய ஸ்ரீ வைகுந்தத்திலே எப்போதும் ஆதரவுடன் வசிக்க பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சீரணி என்றது கல்யாண குணங்களின் கூட்டத்தைச் சொல்லுகிறது.
எம்பெருமானுடைய திருநாமங்களையே தம் தம் பிள்ளைகளுக்கு நாம கரணம் பண்ணும் படி, நாட்டு மக்களை நோக்கி உபதேசித்துப் பெரியாழ்வார் அருளிச் செய்த இந்த பத்து பாட்டுக்களையும் ஓத வல்லவர்கள் பரம பதத்தில் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவார்கள் என்று இந்த பதிகம் கற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறார்.
Leave a comment