திவ்ய பிரபந்தம்

Home

4.6.7 மண்ணில் பிறந்து மண்ணாகும்

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு, * எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள், * கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே, * நண்ணு மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்.

பெரியாழ்வார் திருமொழி 4.6.7

மண்ணில் இருந்து உண்டாகி, மண்ணில் மறையும் மனிதருக்கு சாதாரண பெயர்களை இட்டு, ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிற அறிவு இல்லாத மனிதர்களே, கண்ணுக்கு இனிதாக இருக்கும் கறுத்த மேகம் போன்ற வடிவை உடையவனுடைய திரு நாமத்தை (உங்கள் பிள்ளைகளுக்கு) வையுங்கள், அத்தகைய தாய் தந்தையர் நரகம் போக மாட்டார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மண் ஆய், நீர், எரி, கால், மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்;
புண்
 ஆர் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்தொழிந்தேன்‘ (பெரிய திருமொழி 1.9.6) ல் சொல்லியபடி மண்ணில் இருந்து பஞ்ச பூதங்களினால் உண்டாகி, முடியும் போது மண்ணில் மறையும் மனிதர் என்கிறார். மறுமையை (இந்த பிறவி முடிந்த பின்), பற்றி ஒரு கவலையும் இல்லாதபடி இருக்கும் அறிவற்ற மனிதர்களே, கண்ணால் காண்பதற்கு இனிமையாகவும், காளமேகம் போன்ற நிறம் உடையவனான எம்பெருமானின் திருநாமங்களை விரும்பி இடுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை இட்டு அழைத்தால் அப்பிள்ளைகளின் தாய் தந்தையர் நரகம் புகார் என்கிறார்.

Leave a comment