திவ்ய பிரபந்தம்

Home

4.6.6 நாடும் நகரும் அறிய

பெரியாழ்வார் திருமொழி 4.6.7

நாட்டில் உள்ள சாதாரணமான பிரஜைகளும், நகரத்தில் உள்ள விசேஷமானவர்களும் ‘இவன் உயர்ந்தவன்’ என்று அறியும்படி தாழ்மையான மனித பெயரை இட்டு அவர்களோடு கூடி அவர்கள் பக்கம் திரும்பி அவர்கள் வீழ்ந்த குழியிலே விழுந்து தவறி போகாமல் ‘சகடாசுரன் ‘ முறியும்படி பாய்ந்த பெருமையை உடையவனே என்றும் தாமோதரா என்றும் வாழ்த்திக் கொண்டு அழையுங்கள்; இப்படி செய்தால், நாரணன், தாய் தந்தையரை நரகம் போக விடமாட்டான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சாதாரணமான ஞானிகளும், இவன் உயர்ந்தவன் என்று அறியும்படி, மனிதர்களின் பெயரை விட்டுவிட்டு, அவர்களோடு கூடி ஒளி மழுங்கி குழியில் விழுந்து, தவறி போகாமல் சகடாசுரன் முறிந்து போகும்படி உதைத்து அருளின பெரியவனே, தாமோதரனே என்றும் வாழ்த்தி திரியுங்கள். அப்படி இருந்தால், அதாவது, உங்கள் பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை இட்டு அழைத்தால், அப்பிள்ளைகளின் தாய் தந்தையர் நரகம் புகார் என்கிறார்.

Leave a comment