திவ்ய பிரபந்தம்

Home

4,6.4 மானிட சாதியில்

பெரியாழ்வார் திருமொழி 4.6.4

மனித ஜாதியில் தோன்றிய ஒரு மனிதப் பிறவியை, கர்ம பலத்தினை அனுபவிக்க பிறந்த மனித பெயரை இட்டு அழைத்தால் அது மோக்ஷத்திற்கு உடல் ஆகாது. என்னுடைய நாராயணன் பெயரை இட்டு பரமபதத்தை இருப்பிடமாக உள்ள ஸ்ரீமானே, கோவிந்தனே, என்று இப்படி சொல்லி அழைத்தால் அன்னை நரகம் புக மாட்டாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நானுடை நாரணன் என்று சொன்னது, பகவத் விஷயத்தில் தனக்கு உள்ள பிரேமையினால், என்னுடைய நாராயணன் என்று ஆழ்வார் சொல்கிறார்.

புண்ணிய பாவங்கள் இரண்டையும் அநுபவித்தற்கும் ஸம்பாதிப்பதற்கும் காரணமாக மனுஷ்ய ஜாதியில் பிறக்கும் பிராணியை, இந்த உலக இன்பங்களில் ஒரு பயனை விரும்பிக் கர்மத்தினால் மநுஷ்ய ஜாதியில் ஒன்றின் பெயரை இட்டு அழைத்தால், இந்த லோகத்தில் சில சிறிய பலன்கள் கிடைத்தாலும் மேல் உலக பேற்றுக்கு ஒரு பயனும் அளிக்காது. அப்படி இல்லாமல், எம்பெருமாள் திருநாமத்தை இட்டு அழைத்தால் அப்பேறு பெற எந்த குறையும் இல்லை. உங்கள் பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை இட்டு அழைத்தால் அப்பிள்ளைகளின் தாய் தந்தையர் நரகம் புகார் என்கிறார்.

Leave a comment