உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து, * எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேரிட்டீர், * பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே * நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்.
பெரியாழ்வார் திருமொழி 4.6.3
பிள்ளை பெற்று பொலிந்து இருப்பவர்களே, உச்சியிலே தடவத்தக்க எண்ணையையும் நெற்றிச் சுட்டியையும் வளையையும் விரும்பி அதற்காக எம்பெருமானை ஒழிந்த மற்ற பெயர்களை இட்டீர்களே, பிச்சை எடுத்து ஜீவித்தாலும் எம்பெருமானுடைய திருநாமத்தை இட்டே விரும்பி அழையுங்கள்; இப்படி அழைத்தால் அன்னை நரகம் புக மாட்டார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உங்கள் பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை இட்டு அழைத்தால் அப்பிள்ளைகளின் தாய் தந்தையர் நரகம் புகார் என்கிறார்.
Leave a comment