திவ்ய பிரபந்தம்

Home

4.5.9 வாயொரு பக்கம் வாங்கி

பெரியாழ்வார் திருமொழி 4.5.9

வாயானது வாத விகாரங்களினால் ஒரு பக்கம் வலிக்கவும் பெருக்கினா நீரை உடையதாய் உள்ளே இடிய இழிந்த கண்கள் அலமர்ந்து நிற்க, ஒரு பக்கம் தாயாரும், மற்றொரு பக்கம் தந்தையும், இன்னோர் பக்கம் மனைவியும் கதற நெருப்பை ஒரு பக்கதில் இடுவதற்கு முன்னே, சிவந்த திருக் கண்களை உடைய சர்வேஸ்வரனை உறுதியாக பந்துவாகக் கொண்டு ஸம்ஸாரிகளோடு உள்ள உறவைப் பற்றி அதிகம் கவலைபடாமல், எல்லாம் அவனே, என்று பற்றி நிற்க வல்லவர்களுக்கு யம கிங்கரர்களின் கொடூரமான தண்டனைகளில் இருந்து உஜஜீவித்து போகலாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

காலங்களைப் பாழ் பட கழித்தவர்கள், அப்போது பகவந் நாம ஸங்கீர்த்தத்துக்கு அவகாசம் இல்லாமல், யம கிங்கரர்களின் நலிவுக்கு ஆளாக வேண்டி வரும்; ஆதலால் சரீரம் கட்டுக் குலைவதற்கு முன்னமே எம்பெருமான் தன்னையே எல்லா வித சொந்தமாக பற்றினால் யம தண்டனைக்குத் தப்பிப் பிழைக்கலாம் என்று சொல்கிறார்.

திருவிருத்தம் 95 ல் சொல்லியபடி ‘மாதாவினைப் பிதுவை, திருமாலை வணங்குவனே’ எம்பெருமானையே தாயாகவும் தந்தையாகவும் வணங்குபவர்கள். திருவாய்மொழி (5.1.8) ல் சொல்லியபடி ‘சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரே இனி யாவாரே’ என்று இருப்பவர்கள் என்கிறார்.

Leave a comment