திவ்ய பிரபந்தம்

Home

4.4.11 சீதநீர் புடை சூழ் செழுங்கழனி

பெரியாழ்வார் திருமொழி 4.4.11

குளிர்ந்த தண்ணீரால் முழுவதும் சூழப்பட்டு செழுமையான கழனிகளை உடைய திருக்கோட்டியூரில் எழுந்து அருளி இருக்கிற ஆதி புருஷனான எம்பெருமானுக்கு அடிமை செய்து வருபவர்களையும் கைங்கர்யங்களில் ஈடுபடாமல் இவ்வுலக விஷயங்களில் திரிபவர்களையும் குற்றமற்றவர்களாய் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உதவி செய்பவர்களாய், சம்சார தாபத்தை போக்கும் குளிர்த்தி உடைய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் புகழ்ந்தும் பழித்தும் அருளி செய்த சொல்லான இந்த பத்து பாடல்களையும் குற்றம் இன்றி சொல்ல வல்லவர்கள், அதாவது பெரியாழ்வாரின் திருவுள்ள கருத்தை அறிந்து, அதில் பழுது இன்றி சொல்பவர்கள், ரிஷிகேசனான எம்பெருமானுக்கு அடிமை செய்ய பெருவாரகள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

திருக்கோட்டியூர் எம்பெருமானுக்கு அடிமை செய்யும் பாகவதர்களைப் புகழ்ந்தும், அடிமை செய்யாது உலக விஷயங்களிலே மண்டித் திரியும் மற்றவர்களின் பாவங்களை சொல்லியும் அருளிச் செய்த இந்த பாசுரங்களை பழுது இல்லாமல், ஓதவல்லவர்கள் எம்பெருமானுக்கு நித்ய கைங்கரியம் செய்ய பெறுவார்கள் என்று பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment