திவ்ய பிரபந்தம்

Home

4.3.6 பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி

பெரியாழ்வார் திருமொழி (4.3.6)

ஆளத்தி வைத்துப் பாடத்தக்க வண்டு கூட்டங்கள் பண்களை பாடிக்கொண்டு தேனை பானம் பண்ணி செல்லும்படியாக சோலைகள் வாடாமல் வளர்ந்து செல்லத்தக்க ஊற்றை உடைய மலையாய் மிக பழமையான, நீண்ட காலமாக உள் திருமாலிருஞ்சோலை அதே – பஞ்ச பாண்டவர்களின் மனைவியாய் பாஞ்சால ராஜன் மகளான திரௌபதி பட்ட மனக்குழப்பத்தை எல்லாம் திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருந்து, அவள் பட்ட துன்பங்களை எல்லாம் துரியோதனனுடைய நூறு தம்பிமார்களின் ஸ்த்ரீகள் பக்கம் இருந்து (திரௌபதிக்கு மான பங்கம் வராதாபடி புடவை சுரக்கும் படி செய்த) உபகாரகனுடைய திருமலையாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பாண்டவர் என்று சொல்லாமல் தம்முடைய பாஞ்சாலி என்கிறார். ஒவ்வொருவரும் தனித்தனியே ரக்ஷிக்கும் பெருமையை உடைய கணவர்கள் கொண்ட பாஞ்சாலி என்பது புலப்படுகிறது.

மறுக்கம் எல்லாம் என்று சொல்வதற்கு முன்னால், பாஞ்சலியின் புகுந்த வீடு பெருமையும், புகுந்த வீடு பெருமையும் சொல்கிறார். இந்த பெருமைகளைப் பார்த்தால், இப்படி மறுக்கம் வருவதற்கு கொஞ்சம் கூட காரணம் இல்லை என்கிறார். அருகில் இருந்தாலும், கணவர்கள் பொய் சூதில் தோற்றதனால் செய்வது அறியதாலும் , பிதாவானவன் அருகில் இல்லாததாலும், தான் அபலை ஆனதாலும், பிரபலமானவர்கள் நலிகையாலும் வந்த ‘மறுக்கம் எல்லாம்’ என்கிறார்.

பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் (பெரியாழ்வார் திருமொழி 2.1.1) ல் சொன்னபடி பாண்டவர்கள், துரியோதர்களுடன் ஆடின பொய் சூதாட்டத்தில், தங்கள் மனைவியான த்ரௌபதியையும் கூடத் தோற்றதனால், வந்த மறுக்கம்.

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன் அணியிழையைச் சென்று, எந் தமக்கு உரிமை செய்‘(பெரிய திருமொழி 2.3.6) என்றபடி, குருடன் மகனான துச்சாதனன் என்ற துரியோதனனின் முரட்டு தம்பி, இவளை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து மஹா ஸபையிலே நிறுத்திப் பரிகாசமான பேச்சுக்களை பேசி, துகிலை உரித்து ‘எங்களுக்கு அடிமை செய் ‘ என்ற போது, அவள் பட்ட அவமானங்களை எல்லாம், மறுக்கம். இப்படி அவள் பட்ட மறுக்கங்கள் பல.

கண்ணன், துரியோதன் மற்றும் அவனது சகோதர்களின் மனைவியர்க்கும் கிடைக்கும்படி செய்தருளினான். இதையே திருமங்கை ஆழ்வாரும், ‘சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர்த் தம் பெண்டிரும் எய்தி நூலிழப்ப,‘ (பெரிய திருமொழி 2.3.6) என்று சொல்லி, அவர்கள் மடிந்ததை குறிப்பிடுகிறார்.

அப்பன் என்று சொன்னது, திரௌபதைக்கு சரணாகதி செய்த அப்பன் தனக்கு செய்ததாக சொல்கிறார்.

பிறப்பில் இருந்தே பாட்டைத் தவிர வேறொன்றும் அறியாத வண்டுகள் இவைகளைப் பாடிக் கொண்டு தேன் பருகுவதற்கு செழிப்பான சோலைகள் வேண்டும்; அவை நன்கு வளர்வதற்கு நீர் வேண்டும்; அதற்கு பல ஊற்றுக்கள் இந்த தென் திருமலையில் உள்ளதை இறுதி வரிகள் கூறுகின்றன.

திருவனந்தாழ்வானே தென் திருமலையாய் வந்து பற்பல ஆண்டுகளாக, தொன்று தொட்டு, நிற்கையாலே “தொல்லை மாலிருஞ்சோலை” என்கிறார்.

Leave a comment