திவ்ய பிரபந்தம்

Home

4.3.11 மாலிருஞ் சோலை என்னும்

பெரியாழ்வார் திருமொழி 4.3.11

திருமாலிருஞ்சோலை என்னும் திரு நாமத்தை உடைய திருமலையை வாசஸ்தானமாக உடையவனாய், ஒரு மலை சாய்ந்தார் போல் இருப்பவனாய், திரு அஷ்ட்டாக்ஷர ரூபியாய் நால் வகைப்பட்டு இருந்துள்ள வேதமாகிற சமுத்திரத்தின் சாரமான அமுதை மேலான பெரிய கல்ப வர்க்ஷத்தை ஒத்தவனாய் வேதாந்தங்களின் சீரிய அர்த்தங்களுக்கு எல்லாம் மேலாய் இருந்து தனக்குத் தானே விளங்கும் விஷயமாக பெரியாழ்வாராலே அருளி செய்யப்பட்டவை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த பதிகம் கற்றவர்களுக்கு பலன் சொல்லி முடிக்கிறார். இந்த பாசுரங்களின் பொருளை அறிந்து கொள்வதே இது கற்பதற்கான பயன் ஆகும் என்பது ஆழ்வார் திருவுள்ளம். நாலிருமூர்த்தி தன்னை. என்று சொன்னது, வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என்று தன்னையே நால்வகையாக பிரித்து கூறப்பட்ட பெரிய வடிவை உடையவன் என்பது பொருள் ஆகும். அங்கு சொல்லப்பட்ட இரு என்ற வார்த்தைக்கு, இருமை அல்லது பெருமை என்று பொருள். நால் இரு மூர்த்தி என்பது, (4 x 2 = 8) என்ற வகையில் திருவஷ்டாஷரம் (எட்டு எழுத்துக்களில் அவனை சொல்லும் மந்திரத்ததால் சொல்லப்படும்) ‘அஷ்டாக்ஷர ஸ்வரூபியானன்’ என்றும் கொள்ளலாம்.

வேதியர் முழு வேதத்து அமுதத்தை,’ (திருவாய்மொழி 3.3.5)ல் சுவாமி நம்மாழ்வார் சொல்லியதை இங்கே சொல்கிறார்.

நால்வேதக் கடலமுது என்று சொன்னது, நான்கு வேதங்களால் சொல்லபடுகிற எம்பெருமானை கூறப்படுகிறவன் என்கிற காரணம் கொண்டு, எம்பெருமானையே குறிக்கின்றது.

மேல் இரும் கற்பகத்தை என்று சொன்னது, ‘ன்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்‘, (திருவாய்மொழி 2.7.11) என்பதை போல அதிகாரியும் அதுவே பெற்று தரும் என்கிறார்.

Leave a comment