திவ்ய பிரபந்தம்

Home

4.3.10 ஆயிரம் தோள் பரப்பி

பெரியாழ்வார் திருமொழி 4.3.10

பல நதிகளையும் அநேக ஆயிரங்களான தடாகங்களையும் அழகிய அநேகமான சோலைகளையும் உடைய திருமாலிருஞ்சோலை அதே ; அநேகமான திருத் தோள்களை பரப்பிக் கொண்டும் ஆயிரம் திருமுடிகளும் (திரு அபிஷேகத்தின் இரத்தினங்கள் மூலம்) ஒளிவிடவும் பரந்த ஆயிரம் தலைகளையுடைய அனந்தசயனன் ஆனவன் ஆளுகிற திருமலையாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஆயிரம் ஆயிரம் தோள்களை உடைய எம்பெருமான், ஆயிரம் ஆயிரம் திரு முடிகளையும் கீரிடங்களையும் உடைய எம்பெருமான், ஆயிரம் ஆயிரம் படங்களை உடைய திருஅனந்தாழ்வான் என்ற பாம்பின் மீது பள்ளிகொண்டு அருளும் எம்பெருமான், ஆளும் மலை, ஆயிரம் ஆயிரம் ஆறுகளையும், ஓடைகளையும், ஆயிரம் ஆயிரம் பூஞ்சோலைகளையும் உடைய திருமாலிருஞ்சோலை ஆகும் என்கிறார். பெரிய திருமொழி (9.8,1)ல் சொல்லிய  ‘சந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து, வந்திழி சாரல் மாலிருஞ் சோலை‘ என்பதை இங்கே குறிப்பிடலாம்.

சுவாமி நம்மாழ்வார் திருவாய்மொழி (8.10.8)ல் ‘தாளும் தோளும் முடிகளும் சமனி லாத பலபரப்பி ‘ என்று சொன்னதை இங்கே நினைவு கொள்ளலாம்.

திருவனந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டு அருளுகிறவன், அவனுக்கு உகந்த ஸ்தலமான திருமாலிருஞ்சோலை மலையையே திருவனந்தாழ்வான் என்கிறார்.

Leave a comment