பலபல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை, * அல வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை, * குலமலை கோலமலை குளிர் மாமலை கொற்ற மலை, * நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலை அதே.
பெரியாழ்வார் திருமொழி 4.3.5
தொண்டக் குலத்துக்கு தலையான மலையாயும் அழகிய மலையாயும் குளிர்ந்ததாகவும் மேன்மையை உடைய மலையாயும் வெற்றியை உடைய மலையாயும் மாம் முதலியவை முளைக்கத் தக்க மண் உடைய மலையாயும் உயர்த்தியை உடைய மலையாயும் இருந்துள்ள திருமாலிருஞ்சோலை அதே; பற்பல குற்றங்களை வாயாரச் சொல்லி, தூஷித்த சிசுபாலனை, விஷயங்களை பாராமல், தன் நெஞ்சில் தோன்றியவற்றை மற்றும் சொல்லுதலை நீக்கி, ரக்ஷித்த (இறுதி காலத்தில் தன் அழகினைக் காட்டி தன்னளவில் துவேஷத்தை மாற்றுகையாலே, தான் என்றால் நிந்தித்து கொண்டு திரிவதை போக்கி அவனை காத்ததவன்) அழகை உடைய அலங்காரத்தையும் உடையவன் வசிக்கின்ற திருமலை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பற்பல குற்றங்களை சொல்லி நீந்தித்த சிசுபாலன் தன்னை, இங்கே குறிப்பிடுகிறார். இவன் சொல்லும் தோஷங்கள் அனுகூலர் வாக்கால் சொல்லத் தகாது ஆகையால் ‘நாழ்’ அல்லது குற்றம் என்கிறார். அவைகளை நெஞ்சால் நினைத்து இருப்பது மட்டும் இன்றி, பிறரால் கேட்டு அறியும் படி வாய்விட்டு சொல்கிறார் என்பதை, ‘சொல்லி’ என்பதால் உரைக்கிறார். ‘கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையுஞ், கேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்” (திருவாய்மொழி 7.5.3) என்றபடி, கேட்பதற்கு பணம் கொடுத்து ஆள் வைத்தாலும் அவர்களும் காது கொண்டு கேட்க முடியாதபடி கண்ணனை சிசுபாலன் தூஷித்துக் கொண்டிருந்தான் என்கிறார். சிசுபாலனுக்குச் இறுதி காலத்தில் கண்ணன் தன் அழகைக் காட்டித் தன்னளவில் பகையை மாற்றி அருளியது முன்னடிகளில் சொல்லப் படுகிறது.
கண்ணன் என்றால் பொறுக்காது நிந்திக்கும் அற்பத்தனம் கொண்டதை அலவலைமை என்கிறார். தன்னிடம் வந்து சேரும் பக்தர்களை எல்லாம், ஸம்ஸாரம் மீண்டும் மீண்டும் வராதபடி, வெற்றியை உடைத்தான மலை என்பதை, கொற்ற மலை என்கிறார். கொற்றம் என்றால் அதிசயம். மணிப் பாறையாய் மட்டும் இல்லாமல், நல்ல பழங்கள் புஷ்பங்கள் தரவல்ல மரங்கள் முளைப்பதற்குப் பாங்கான செழிப்பையுடைய நிலங்கள் அமைந்த மலை என்பதை நீண்ட மலை என்கிறார். பரமபதத்திற்கும் ஸம்ஸாரத்திற்கும் இடைவெளி இல்லாமல் உயர்ந்துள்ளது என்றும் அருளி செய்கிறார்.
Leave a comment