திவ்ய பிரபந்தம்

Home

4.1.10 கரிய முகில் புரை மேனி

பெரியாழ்வார் திருமொழி 4.1.10

காளமேகத்தை ஒத்த வடிவு உடையவனை, ஆச்சரியமான நற்குண சேஷ்டிதங்களை உடையவனை, பார்த்த அடையாளங்களை சொல்லி, சிவந்த நெற் பயிர்களானவை உயர்ந்து குதிரை முகம் போல தலை வணங்கி வளையாமல் நின்றுள்ள கழநிகளை உடைய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு தலைவராய், ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயால் விளங்கி வேதத்திற்கு நிர்வாககரானா பெரியாழ்வார் அருளிச்செய்த சொல் மாலையான இந்த பத்து பாடல்களையும் பேசும்படியான மனதை உடைய பக்தராக உள்ளவர்கள் பரம புருஷனுடைய திருவடிகளை கிடைக்கப் பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

எம்பெருமானைக் காண வேண்டும் என்று தேடுகிறவர்களுக்கு அடையாளங்களைச் சொல்லிப் பெரியாழ்வார் அருளிச் செய்த இந்த பத்துப் பாடல்களையும் ஒதுபவர்கள், எம்பெருமானை காண்பதற்கு தேட வேண்டாதபடி அவனோடு நித்யாநுபவம் செய்யும்படி அவனுடைய திருவடிகளைச் சேரப் பெறுவார்கள் என்று பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார். தேடுகிறவர்களுடைய தன்மையையும், கண்டவர்களுடைய தன்மையையும் ஆழ்வாரே ஏற்று பேசினதால் “கண்ட சுவடு உரைத்து” என்கிறார். செந்நெல்தாள்கள் உயர்ந்து ஓங்கி, நுனியில் கதிர் சேர்ந்து தழைத்திருக்கும் என்பதை சொல்ல, குதிரை முகத்தை உவமையாக கூறுகிறார். தலைவணங்கும் என்பதை சொல்ல இந்த உவமை பொருத்தமே.

Leave a comment