திவ்ய பிரபந்தம்

Home

4.1.5 நீரேறு செஞ்சடை நீலகண்டனும்

பெரியாழ்வார் திருமொழி 4.1.5

எம்பெருமான் ஸ்ரீ பாத தீர்த்தத்தை தரித்த சிவந்த ஜடையை உடைய கறுத்த மிடற்றையை ருத்ரனும் சதுர்முக பிரம்மாவும் சேஷ சேஷி பாவ க்ரமத்தாலே சிறந்த சொற்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணும் படி நின்ற திருமகளின் கணவனான எம்பெருமானை, (பிராட்டியுடன் கூடிய சேர்த்தியை) தேடுகிறீர்கள் என்றால்; கச்சு அணிந்த திருமுலைத் தடத்தை உடைய ருக்மிணிப் பிராட்டியை பலவந்தமாக பிடித்துக் கொண்டு தேரின் மேல் ஏற்றி ருக்மனால் எடுத்து விடப்பட்ட சேனைக்கு நடுவே நின்று யுத்தம் செய்ததை (மணக்கோலத்துடனும், வீரக் கோலத்துடனும்) நிச்சயமாக கண்டார் உள்ளனர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்ய லோகத்திற்கு சென்ற அந்த எம்பெருமானது திருவடியைப் பிரமன் தன் கை கமண்டல தீர்த்தத்தால் கழுவ, அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்தில் இருந்த ஆகாய கங்கா நதியை, ஸூர்ய குலத்துப் பகீரத சக்கரவர்த்தி, கபில முனிவனது கோபத்திற்கு இலக்காகி உடல் எரிந்து சாம்பலாய் நற்கதி இழந்த தனது மூதாதையரான ஸகர புத்திரர் அறுபதினாயிரம் பேர்களை நற்கதி பெறவிருக்கும் பொருட்டு நெடுங்காலம் தவம் செய்து மேல் உலகத்தில் இருந்து கீழ் உலகத்துக்குக் கொண்டு வருகையில், அவனது வேண்டுகோள், சிவபிரான் அந்நதியை முடியின் மேல் ஏற்றுச் சிறிது சிறிதாகப் பூமியில் விட்டு அருளினான் என்ற வரலாற்றை, நீரேறு செஞ்சடை நீலகண்டன் என்றார்.

ருக்மணி பிராட்டியை அவள் விரும்பியபடி, ஆனால் அவள் குடும்பத்தில் மற்றவர்கள் வேறு விதமாக முடிவு செய்ததை எதிர்த்து, கண்ணன் அவளை தூக்கி வந்த போது, சிசுபாலன் போன்றவர்கள் படையுடன் எதிர்க்க, அவர்களுடன் யுத்தம் செய்த போது, அவனை கண்டவர்கள் உளர் என்று பாடலினை முடிக்கிறார்.

Leave a comment