திவ்ய பிரபந்தம்

Home

3.9.11 நந்தன் மதலையை

பெரியாழ்வார் திருமொழி 3.9.11

நந்தகோபன் குமரன் ஆன கண்ணனையும் ககுத்ஸ்த சக்ரவர்த்தியின் வம்சத்தில் வந்த ஸ்ரீ ராமனையும் ஒருவருக்கு ஒருவர் எதிரியாய் கொண்டு சொல்லி உந்தி பறக்கையாகிற லீலா ரசம் கொண்டு ஆடின அழகிய ஆபரணங்கள் அணிந்த பெண் சொல்லை செவ்வையை உடைய தமிழ் மொழியால் அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளிச் செய்த கிரிஷ்ணாவதார விஷயமாக ஐந்தும், இராமாவதார விஷயமாக ஐந்தும் இந்த பத்தையும் ஓத வல்லவர்களுக்கு யாதொரு துன்பமும் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை. (உந்தி என்பது மகளிர் விளையாட்டில் ஒன்று).

நந்தகோபனின் மகனான கண்ணனை பற்றிய ஐந்து பாடல்களையும், ஸ்ரீராமனை பற்றிய ஐந்து பாடல்களையும் உந்தி பறந்து லீலா ரசம் கொண்டு கொண்டாடின அழகிய ஆபரணங்கள் அணிந்த ஆயர் குல பெண்கள் இருவர் பாடிய பாடல்களை, அழகிய தமிழினில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தலைவரான பெரியாழ்வார் அருளி செய்த இந்த பத்து பாடல்களை பாடுபவர்களுக்கு துன்பம் இல்லை என்று பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment