தார்க்கு இளந் தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம், * நூற்றவள் சொல் கொண்டு போகி நுடம் கிடைச் * சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவ ஆர்க்க * அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக்கு அரசனைப் பாடிப்பற.
பெரியாழ்வார் திருமொழி 3.9.8
மாலையிட்டு இராஜ்யம் செய்ய இணங்காத தம்பியாகிய பரதனுக்கு அரசினை கொடுத்து, கைகேயின் சொற்படி, வனவாசம் (தண்டகாரண்யம்) சென்று, (காம ரூபிணியான காரணத்தால்) துவளகின்ற இடையை உடைய சூர்ப்பணகையின் காதையும் மூக்கினையும் அவள் கதற கதற அறுத்து எரிந்த அயோத்தியின் சக்ரவர்த்தியான இராமனை பாடுக என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சக்கரவர்த்தி அனுமதி கொடுத்ததாலும், இராமன் உடன்பட்டு கொண்டதாலும், நாடு ஆள்பவர் இல்லாமல் அராஜகமாக போக கூடாது என்பதாலும் வசிஷ்டர் முதலானோர் வேண்டிக்கொண்டதாலும், பரதனுக்கு முடி சூடிய முயற்சிக்க, அண்ணன் இருக்கும் போது தம்பி முடி சூடி முடியாது என்று மறுத்து திருசித்திர கூடம் வரை சென்று மீண்டும் வரவேண்டும் என்று இராமனை அழைத்த பரதனுக்கு தன்னுடைய திருவடிகளை தந்தது சொல்லப் படுகிறது.
சூர்ப்பணகையின் காது மூக்கினை அறுத்தது இளைய பெருமாள் ஆகிய லக்ஷ்மணன், ‘ராம்ஸ்ய தக்ஷிணோபாஹூ ‘ என்று சொல்லப்படுவதால் ராமனை அறுத்ததாக சொல்கிறார். மேலும் ஸ்ரீ ராமனே காரணம் ஆனதால் இவ்வாறு சொல்லப் பட்டது.
Leave a comment