திவ்ய பிரபந்தம்

Home

3.9.5 பஞ்சவர் தூதனாய்ப்

பெரியாழ்வார் திருமொழி 3.9.5

பஞ்ச பாண்டவர்களுக்கு தூதனாய் பாரத யுத்தத்தில் கையில் கொண்டு விஷத்தை உமிழ்கின்ற காளியநாகம் கிடந்த கொடிய பொய்கைக கரையிலே புகுந்து அவன் அஞ்சும்படி பணங்களின் மேலே (அவ்வளவிலே அவனும் அவன் மனைவியும் சரண் புக) அவனை கொல்லாமல் விட்டு மை போன்ற வர்ணத்தை உடையவனான பாடிப் பற ; யசோதையின் சிங்கத்தைப் பாடிப் பற என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

  • கண்ணன் பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது சென்றதும்,
  • பாண்டவ தூதன் என்று பெயர் பெற்று,
  • பாண்டவர்களுக்கு ஒன்றும் இசையாததால், ‘யுத்தம் செய்து ஜயித்தவர்கள் பூமி ஆளுங்கள்’ என்று அவர்களை யுத்தத்தில் பொருத்தி,
  • பாண்டவர்களுக்காக நின்று, யுத்தத்தை அவர்களுக்காக நடத்தி கொடுத்ததும்,
  • காளியனின் கர்வத்தையும் வலிமையும் அடக்கி
  • அவன் தலை மேல் நர்த்தனம் ஆடிய வரலாறுகளை இங்கே குறிப்பிடுகிறார்.

அப்படிபட்ட யசோதையின் சிங்கமான கண்ணனை தன்மேனி நிறம் பிரகாசிக்கும்படி பாடுக என்கிறார். நற் பொய்கை என்று சொன்னது நல்ல பாம்பு என்று சொல்வது போல விபரீத அடைமொழி.

Leave a comment