திவ்ய பிரபந்தம்

Home

3.8.8 குடியில் பிறந்தவர் செய்யும்

பெரியாழ்வார் திருமொழி 3.8.8

குணபூர்த்தி ஆனவளே, ஸ்ரீ நந்தகோபருடைய திருமகனான கண்ணனானவன் உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் தங்கள் குடிக்குத் தகுந்த குணத்தில் ஒன்றும் செய்ய வில்லை. (அதுவும் இன்றி) உலக நடத்தையிலும் ஏக தேசமும் செய்ய வில்லையே; ஐயோ என்று மனம் வருந்தி இடையானது இரு பக்கமும் வளையும்படி என் மகள் ஆனவள் ஏங்கி இளைத்து இளைத்து கடைகிற கயிற்றையே பிடித்து வலித்து அதனால் மிருதுவான கையானது தழும்பேறி விடுமோ என்று சந்தேகப்படுவது இந்த பாடலின் பொழிப்புரை.

திருத்தாயார், தன் மன வருத்தத்தை பக்கத்து வீட்டிலுள்ள ஒரு பெண்ணிடத்து கூறுவதாய் அமைந்த பாசுரம். ”நந்தகோபன் மகன் கண்ணன், தான் அவதரித்த உயர் குல வழக்கபடி ஒரு நல்ல குணத்தையும் கொண்டதாக தெரியவில்லை. அப்படி இல்லாமல், சாதாரண மனிதர்கள் செய்யும் நல்ல வழக்கங்களையும் கூட செய்ய வில்லை. தன் வீட்டுக்குக் கொண்டு போனதும் உடனே இவளைத் தயிர் கடையவோ நியமிப்பது? இளம் பருவத்தளான என் மகள் இடம் வலம் கொண்டு தயிர் கடைய வேண்டுமானால் இடை துவண்டு உடல் இணைத்துப் பெருமூச்சு விட்டு இவ்வகை வருந்தங்களோடு, தொடங்கின காரியம் தலை காட்டும் அளவும் இடைவிடாமல் கடை கயிற்றையே பிடித்து வலித்திழுத்தால் அவளுடைய தளிர்போன்ற தடக்கைகள் தழும்பு ஏறி வருந்த மாட்டாளோ” என்று தாயார் கூறும் வண்ணம் உள்ள பாட்டு.

Leave a comment