திவ்ய பிரபந்தம்

Home

3.8.10 மாயவன் பின் வழி சென்று

பெரியாழ்வார் திருமொழி 3.8.10

ஆச்சரியமான விளையாட்டுக்களை செய்ய வல்ல சர்வேஸ்வரனுக்கு பின்னே போய், போகும் வழியில் கண்ட அபூர்வ விஷயங்களை கேட்டு திருவாய்பாடியிலும் புகுந்து அங்கு உள்ளவர்களுக்கு தக்கபடி செய்த தன் பெண்ணின் சொற்கள் எல்லாவற்றையும் தாயானவள் அருகில் நின்றவர்களை குறித்து சொன்ன சொற்களை குளிர்ந்த ஸ்ரீவில்லி புத்தூருக்கு தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த பரிசுத்தமான தமிழ் மொழியில் பத்து பாடல்களையும் ஓத வல்லவர்கள் பழிப்பற்ற நீல மணி போன்ற வடிவழகை உடையவனுக்கு அடிமை (சேவை) செய்ய பெறுவர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தனது பெண்பிள்ளை கண்ணன் பின்னே புறப்பட்டு, கிளி போல மிழற்றி நடந்து, போகும் வழியில், வேறு விதமாகப் பேசிக் கொண்டு திருவாய்ப்பாடி சென்று, அங்குப் புகுந்த பின்பு, யசோதை, ஸ்ரீநந்தகோபர், மருமகப் பிள்ளை ஸ்ரீகிருஷ்ணன், தன் பெண்பிள்ளை ஆகிய இவர்கள் தங்கள் தங்களுக்கு உரிய குணமாகச் செய்யும் செயல்களையும் சொற்களையும் மற்ற எல்லாவற்றையும் திருத் தாயார் தன் திருமாளிகையிலேயே இருந்து கொண்டு சில நேரம் மகிழ்ந்தும், சில சமயம் வருந்தியும் வருபவர்களிடத்தில் பேசிய வார்த்தைகளான இந்த பதிகத்தை ஓதவல்லவர்கள், பகவத் கைங்கரியமாகிற செல்வத்தைப் பெறுவர் என்று இந்த பதிகத்தை சொல்பவர்களுக்கான பலன் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment