ஒன்றும் அறிவு ஓன்றில்லாத உரு அறைக் கோபாலர் தங்கள், * கன்று கால் மாறுமா போலே கன்னி இருந்தாளைக் கொண்டு, * நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை, * என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சுக் சொலா இடுங்கொலோ.
பெரியாழ்வார் திருமொழி 3.8.2
பொருந்தின ஞானம் அல்பமும் இல்லாதவர்களாய் உரு இல்லாத இடையர் ஆனவர்கள் நல்வழியாய் கண்ணுக்கு நன்றாக இருந்துள்ள கன்றுகளை உடையவர்கள் அறியாமல் களவிலே கொண்டு போவது போல், கன்னியாய் எனக்கு கீழ்ப்படிந்து இருந்த என் மகளை மிகவும் உபாயம் செய்து கொண்டு போன நாராயணன் செய்த தீம்பானது எங்கள் குலத்திற்கு எப்போதும் ஒரு பழிச்சொல் என்று ஆகிவிடுமோ அல்லது புகழோ என்று தவிப்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பிறர் கொட்டிலில் கட்டி வைத்துள்ள கன்றுகளைத் திருடிக் கொண்டு போவது போல கண்ணன் என் மகளைத் திருடிக்கொண்டு போனான்; இப்படி அவனது தீமையானது எங்கள் குலத்துக்குச் நிரந்தரமான அவப்பெயரை கொடுக்குமோ என்று சந்தேகித்து சொல்கிறார்.
தங்கள் கன்றுகளை, “உங்களுடையவை” என்று பிறர்க்குக் காட்டி கொள்வது, அவர்கள் கன்றுகளைத் தங்களுடையன என்று ஆக்கி கொள்ளுதல் என்பது கன்று கால் மாறுதல் என்ற தொடரில் உள்ள தீமையும் நல்லதும் ஆகும். பிறருடைய அழகிய கன்றுகளை, அதற்கு உரிமையானவர்கள் அறியாமல், களவு வழியால் எடுத்துக் கொண்டு ஆகும்.
இங்கு, நன்றுங்கிறி செய்கை என்பது பகலில் கொண்டு போனால் பலர் அறிந்து தடுக்க கூடும் என்பதால் அனைவரும் உறங்கும் போது ஒட்டி கொண்டு போதல். இப்படி இவன் செய்த தீமையானது குற்றமற்ற எங்கள் குடிக்கு பழிப்பாகுமோ அல்லது, என் பெருமான் தானே வந்து கைக் கொண்டு போனான் என்றால் அது இந்த குடிக்கு ஏற்றம் ஆகுமோ என்று பலவாறாக சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.
Leave a comment