திவ்ய பிரபந்தம்

Home

3.7.9 கைத்தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள்

பெரியாழ்வார் திருமொழி 3.7.9

(இவள் விஷயமாக) கையில் உள்ள செல்வம் எல்லாம் அழியும்படி கல்யாணங்களை பண்ணி, நமக்கு கீழ் படியாத இவளை நியமித்தும் காவலிட்டும் வைத்துக் கொண்டு இருந்தது என்ன பயன்; நம் குடிக்கு பழி உண்டாகும். (என்று தாயார் சொல்ல, அதனை கேட்ட சொந்தங்கள் ) கழனியிலே வளர்கிற நாற்றுக்களை உடையவன வேண்டியபடி அவன் அவற்றை விநியோகம் செய்து கொள்வது போல், இவளையும் இவளால் விரும்பப்படுகிற அவன் வேண்டியபடி செய்து கொள்ளும்படி, கறுப்பாய், பெருத்து மேகம் போன்ற வடிவை உடையவன பக்கத்தில் இவள் வளரும்படி விட்டு விடுங்கள் என்கிறார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நம் குடிக்காக இவளொரு பெண் தானே இருக்கிறாள் என்று அன்பு மிகுதியால், கையிலுள்ள செல்வத்தை எல்லாம் செலவழித்து இவளுக்குச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களை செய்து இவளை நான் காத்து வருவதனால் நமக்கு இறையும் பயனின்றி ஓழிந்ததே அன்றி, இவளது நடத்தையினால் நமக்குப் பெருத்த பழிகளும் விளைந்தன. இப்படி கலங்கிப் பேசின தாயை நோக்கி, சொந்தங்கள், ஒருவன் தன் இடத்தில் உள்ள நாற்றுக்களை தன் கருத்து போல தான் விநியோகத்து கொள்வதை போல், ஸர்வேச்வரன் தனது உடைமையான இவளைத் தன் நினைவின்படி உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு, இவளை அவனிடத்திற்கு கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கூறியதை தாய் கூறுகிறார்.

Leave a comment