திவ்ய பிரபந்தம்

Home

3.7.6 பட்டம் கட்டிப் பொற்றோடு

பெரியாழ்வார் திருமொழி 3.7.6

சுருட்சியை உடைய நீண்டு உள்ள, கூந்தலை உடையவர்களாய், பருவத்தால் இளையவர்களாய் உள்ள பெண்களை, நெற்றிக்கணியான பட்டத்தை கட்டியும், காதுக்கு அணியான பொன்னால் செய்த தோட்டையும், கழல் அணியான பாடகத்தையும், சிலம்பையும் இட்டும் இவள் இஷ்டப்படி வளர்த்து, இடுப்பில் எடுத்து கொண்டு திரிந்த எனக்கு, இப்படி அருமையாக வளர்க்கப்பட்ட இவள் இப்படி சீராட்டி வளர்த்த என்னோடு என் அருகில் இருக்கவும் ஆசை படவில்லை, திடீரென்று என்னை கைவிட்டுப் போய், எல்லோரும் காணத் தெருவில் புறப்பட்டு நின்று ‘காயாம் பூ போன்ற நிறத்தை உடையவனே’ என்று வாய் விட்டு கூப்பிட்டு நிற்கின்றாள்; (இதனால் அறிந்தது என்ன வென்றால்,) பைத்தியம் பிடித்தது என்று இத்தனை காணாது அறிந்தது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

உலகத்தில் பெண்கள் விசேஷமாக ஆபரணங்களை செய்து தனக்கு அணிவிக்கின்ற தாயை விரும்பி ஒன்றாக இருந்து பிரியாது இருப்பது இயல்பு. அப்படி இருக்க, என் பெண் ஒருவள் மாத்திரம் ஒரு நொடிப்பொழுதும் என்னோடு இருக்க சம்மதிக்காமல் தெருத்தெருவாக திரிந்து, எம்பெருமானது அடையாளங்களைச் சொல்லி அழைத்து மயங்குகின்றாளே என்று சில பெண்களை நோக்கிக் கூறுகின்றாள்.

Leave a comment