திவ்ய பிரபந்தம்

Home

3.7.5 நாடும் ஊரும் அறியவே

பெரியாழ்வார் திருமொழி 3.7.5

திருவாய்பாடி சூழ்ந்த நாட்டில் உள்ளவர்களும், திருவாய்பாடி என்ற ஊரில் உள்ளவர்களும் அறியும்படியாக தன் அகத்தை விட்டு வெளியே போய், பசுமை நிறத்தை உடைய திருத்துழாய் மாலையை சூட்டிக் கொண்டு கண்ணனானவன் வியாபரிக்கும் இடம் எங்கும் தேடித் திரிக்கிறாள்; (இந்த குடிக்கு) கேட்டினை விரும்புகிறவர்கள் பலரும் உண்டு; (ஆகையால்,) நிறைய தலை முடிகள் உடைய கண்ணனோடு அவன் பின்னே திரிகின்ற இவளை (அவனுக்கு அருகில் அந்தப்புர காவலில்) அருகில் காவல் இடுங்கள் என்று இதனையே பல காலும் சொல்லி பூமியில் உள்ள அனுகூல மக்கள் சொல்லி (குடிக்கு கேடு நேரா வண்ணம் சொல்லி) நின்றனர் என்பது இதன் பொழிப்புரை.

என் மகள் தனியாக காரியங்கள் நடத்திக் கொண்டால் பாதகமில்லை; உலகத்தார் அனைவரும் அறியுமாறு எம்பெருமானுடைய துழாய் மாலையைச் சூட்டிக்கொண்டது மட்டும் இன்றி, அவன் எங்கிருக்கிறான் என்று அவன் போகக் கூடிய இடங்களான பசு மேய்க்கும் இடம், பெண்களோடு விளையாடும் இடம், கலக்கை போன்ற இடங்களுக்கு போய் தேடி திரிந்து நிற்கிறாள். இனி இவள் நமக்கு அடங்காள், இவ்வாறு பஹிரங்கமாக எல்லாவற்றையும் செய்யும் இவளை நாம் நோக்காமல் விட்டால் நம் குடிக்குப் பெருங்கேடு விளையும்; எந்த வேளையில் என்ன கேடு விளையப் போகிறது என்று எதிர்பார்தது கொண்டு இருக்கும் பாவிகள் இங்கு ஒருவர் இருவர் இல்லை. ஆகையால் நாம் இவளை இப்படி தனியாக விட கூடாது என்கிறார்கள்.

Leave a comment