திவ்ய பிரபந்தம்

Home

3.7.4 ஏழை பேதை ஓர் பாலகன் வந்து

பெரியாழ்வார் திருமொழி 3.7.4

சபலையாய், அறியாதவளாய், ஒப்பற்ற இளம் பருவத்தளான என் பெண்ணை, பல தோழிமார்கள், நேராக வந்து, ஈடுபடுத்தி, தங்களோடு கூட கொண்டு போய், திருவாழியை உடையவன் என்று பிரசித்தமாய், ஒருவாராலும் எண்ணிப் பார்க்க முடியாத ஆழத்தை உடைய ஆறு போல் இருக்கிற விஷயத்தில் உள்ளே தள்ளி அகப்படச் செய்த சூழ்ச்சியை யாருக்குச் சொல்வேன்; அகப்பையானது தான் சுமக்கிற பொருளின் சுவையை அறியாதது என்ற பழமொழியும் தன் பக்கம் இல்லாதவள் ஆனாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நல்லது கண்டால் விட்டு போக முடியாத சபலை என்பதை ஏழை என்ற சொல்லால் விளக்குகிறார்.

இனி என்ன நடக்க போகிறது என்பதை அறிய முடியாதவள் என்பதை பேதை என்ற சொல்லால் விளக்குகிறார்.

இப்படி ஒரு இளம் பருவத்தில் இருக்கும் என் பெண்ணை, பல தோழியர், நேராக வந்து, அவளுக்கு ஈடுபாடு உண்டாகும்படி செய்து, தங்களுடன் கூட்டி கொண்டு சென்று, திருவாழியை உடையவன் என்று பிரசித்தமாய், யாராலும் அளவிடமுடியாது என்றபடி உள்ள ஆழத்தை உடைய ஆற்றின் உள்ளே தள்ளி, அவளை அகப்பட வைத்து செய்த சூழ்ச்சியை யாரிடம் சொல்வேன்.

அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்‘ (திருவாய்மொழி, 8.3.6) சொல்வது போல, சர்வ ஆபரணங்களும் தானே ஆகப் போகும் படியான திருவாழியை படைத்தவன் என்கிறார்.

அகப்பட்டாரை

‘அகப்பையானது உள்ளே வைத்து இருக்கும் பொருளின் சுவையை அறியாது’ என்ற பழமொழியை அறியாதவளாக என் பெண் இருக்கிறாளே என்று தாய் தனக்குள் புலம்பும் பாசுரமாக உள்ளது.

Leave a comment