திவ்ய பிரபந்தம்

Home

3.3.5 பற்றார் நடுங்க முன்

பெரியாழ்வார் திருமொழி 3.3.5

பகைவர்களான துரியோதனன் முதலானோர் நடுங்கும்படியாக பாரத யுத்தத்திலே நீ பாஞ்சஜன்யத்தை வாயில் வைத்து ஊதின யுத்த முகமான ரிஷபம் போன்ற கண்ணனே, எனக்கு நண்பனாய், இடையர்களுக்கு சிங்கக்குட்டி போன்றவனே, சீதை மணாளனே, சிறு பிள்ளையாய் (இருக்கும் போதும்), செந்தாமரைப்பூ போன்ற கண்களை உடையவனே, திருமாலே, உன் பருவத்திற்கு தகுதியான திருப்பரியட்டமும் உன் கைக்கு அடங்கின விளையாடு பத்திரமும் ஆகிற இவற்றை கட்டில் மேல் வைத்து மறந்து போய், கன்றுகள் மேய்க்க இடை பிள்ளைகளோடு, நீ கன்றுகளை மேய்த்து அவர்களோடு (தன்னேராயிரம் பிள்ளைகளோடு) சேர்ந்து (சிம்மக்கன்று போல்) வந்தாயோ என்று உகக்கிறாள்.

கண்ணன் தானே அருளிச் செய்தமையால், துரியோதனனை சார்ந்தவர்கள், பாண்டவர்களுக்குப் பகைவர் ஆனாலும். இவர்கள் எனக்கும் பகைவர்களே என்று சொல்லப்பட்டனர்,

சீதை மணாளனே, நீ கன்று மேய்க்க காடு செல்ல நினைத்தபோது நான் உனது மேல் துண்டினையும் விளையாட்டுக்கு மழுங்கிய கத்தியையும் கொடுத்த போதும் நீ போகும்போது அவற்றைக் கட்டிலிலேயே மறந்து விட்டுக் காட்டுக்குப் போய் இடைப் பிள்ளைகளோடு கன்றுகளை மேய்த்துவிட்டு மாலைப் பொழுதில் மற்ற பிள்ளைகளோடு ‘இவன் இவர்களில் ஒருவன்’ என்றே நினைக்கும் வண்ணம் வந்து சேர்ந்தாய் என்று உகக்கிறாள்.

Leave a comment