வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிட, * பண்ணிப் பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே, * கண்ணுக்கு இனியானைக் கானதரிடைக் கன்றின் பின், * எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே.
பெரியாழ்வார் திருமொழி 3.2.4
அழகியதாய், கறுத்து இருந்துள்ள கூந்தலை உடையவரான பெண்கள், அவசரமாக அவசரமாக ஓடி வந்து பழி தூற்றும்படியாகப் பண்ணி அளவற்ற தீம்புகளைச் செய்து இந்த ஆயர்பாடி எங்கும், திரியாதபடி கண்களுக்கு இனியவனாக, ‘இப்படிப்பட்டவன்’ என்று நினைப்பதற்கு அரியனானவனை இப்படி காட்டுக்கு அனுப்பி வைத்தேனே, நான் பாவியேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்களுக்கு இனியவனை, இத்தகையவன் என்று யாரும் நினைக்க முடியாதவனை, இந்த ஆய்பாடி முழுவதும் பல தீம்புகள் செய்து, அதனால் பல பெண் பிள்ளைகள் அவனது லீலைகளை என்னிடம் வந்து புகார் செய்ய காரணமாய் உள்ளவனை, அப்படி செய்ய விடாமல், காடுகளில் கன்றுகளுக்கு பின்னே போக விட்ட, தான் ஒரு பாவியே என்று பாடுகிறார். எத்தனை தீம்பு செய்தாலும் அவன் வடிவழகை நினைத்தால் ‘கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்‘ (திருவாய்மொழி 5.3.5) என்பதை போல இவனை விட மாட்டேன் என்கிறதே என்கிறார்.
Leave a comment