திவ்ய பிரபந்தம்

Home

3.1.11 கரார் மேனி நிறத்து

காரார் மேனி நிறத்து எம்பிரானைக் கடி கமழ் பூங்குழலாய்ச்சி, ஆரா இன் அமுது உண்ணத் தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம், பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல், ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் உனடியாரே.

பெரியாழ்வார் திருமொழி 3.1.11

மேகத்தோடு ஒத்த திருமேனி நிறத்தையுடைய கண்ணனை, எனக்கு உபகாரகனானவனை, வாசனை வீசுகின்ற பூக்களை அணிந்த, கூந்தலை உடைய யசோதை பிராட்டி, ஒரு காலும் திகட்டாததாய், போக்கியமாய் இருந்து உள்ள, கொங்கை அமுதத்தை அவன் உண்ணும்படி தருபவளாய் இருந்த நான் அறிவேன், இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேன், ஆகையால், அம்மம் தர அஞ்சுவேன் என்ற பாசுரங்களை பூமி முழுவதும் நிறைந்து இருப்பதாய், மிகவும் பழமையும் கீர்த்தியையும் உடையவராய் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளிச் செய்த பாடல்களை இயல் அழகாலே நிரைந்ததாய் இனிய இசையோடு கூடி இருந்து சொல் மாலையை பாட கூடியவர்கள் ரிஷிகேசனுக்கு (எம்பெருமானுக்கு) கைங்கர்யம் செய்ய பெறுவார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment