தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு, * முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூவேழு சென்ற பின் வந்தாய், * ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன், * அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
பெரியாழ்வார் திருமொழி 3.1.10
கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள, புஷ்பங்கள் அணியப் பெற்ற, கூந்தலை உடைய ஒரு கன்னிகையை விசாலமானதொரு சோலைக்கு அழைத்து கொண்டு போய், முத்து மாலையால் அலங்கரிக்கப்பட்ட கொங்கைகளில் புணர்ந்து நேற்று இரவு மூன்று சாமம் கடந்து விளையாடி விட்டு வீடு வந்து சேர்ந்தாய் என்றும் உனக்கு வேண்டாதவர்கள், வேண்டியபடி பேசலாம் என்றும், (இப்படி இருக்கிற உன்னை) கோபிக்க தாயான நான் சக்தி அற்றவளாக இருக்கிறேன் என்றும் சொல்கிறார். உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன் என்று முடிக்கிறார்.
Leave a comment