திவ்ய பிரபந்தம்

Home

3.1.5 முப்போதும் கடைந் தீண்டிய

முப்போதும் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி, * கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி, * மெய்ப் பாலுண்டு அழு பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற, * அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பெரியாழ்வார் திருமொழி 3.1.5

காலை, உச்சி, அந்தி ஆகிற மூன்று பொழுதுகளிலும் கடையப்பட்டு திரண்ட வெண்ணைய்யோடு தயிரையும் அமுது செய்து இடையர்கள் தோளாலே காலடியில் கொண்டு வந்த பாலை அந்த பாத்திரத்தோடு சாய்த்து அமுது செய்து உடம்பில் உண்டாகிற முலைப்பாலை உண்டு, அது பெறாத போது அழுகிற பிள்ளைகளைப் போல் நீ விக்கி விக்கி என் முலைப்பால் உணவதற்காக அழுகிற என் அப்பனே உன்னை அறிந்து கொண்டேன்; உனக்கு அம்மம் தர அஞ்சுகின்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கறப்பன, கடைவன வாய் செல்லும் போல் காணும் திருவாய்பாடியில், கடைந்தெடுத்த வெண்ணையையும் தயிரையும், இடையர்கள் தம் தோளினால் சுமந்துகொண்டு வந்த பால்களையும் மிச்சமில்லாதபடி கண்ணா, குழந்தையாக இருக்கிற இப்பருவத்திலேயே உண்டு விடுகிறாய்; அப்படியுண்டும், என் இளங்கொங்கை அமுதம் உண்கைக்கு (முலைப்பால்) பொருமிப் பொருமி அழுகிறாய்; நீ மனுஷ்யன் அல்லன் என்று அறிந்து கொண்டேன்.

Leave a comment