திவ்ய பிரபந்தம்

Home

2.10.6 தள்ளித் தளிர் நடையிட்டு

தள்ளித் தளிர் நடையிட்டு இளம் பிள்ளையாய், * உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி, * கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர், * துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் * துவக்கற உண்டானால் இன்று முற்றும்.

பெரியாழ்வார் திருமொழி 2.10.6

தடுமாறி, காலூன்றி நடக்க முடியாததால் தளர் நடை இட்டு, இளம் பிள்ளையாய் இருந்த போதே தன் நெஞ்சினுள் அவளை (பூதனையை) நம்மை நலிய வருகிறாள் என்று உறைக்கப் பார்த்து கள்ளத்தனம் கலந்த, (அதாவது தன் உருவை மறைத்து, தாய் வடிவு பூண்டு வந்த), பூதனையின் முலைப் பாலோடு அவளுடைய உயிரையும் அவள் துடிக்கும்படி, விரும்பி உண்டவனால் இன்று முற்றும்; அந்த விஷத்தில் தனக்கு ஒரு துளியும் வந்து சேராதாபடி இருந்தவனால் இன்று முற்றும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இளம் குழந்தையாய் இருக்கும் போதே அடியவர்களுக்கு நல்ல குணம் உடையவனாய், பூதனை கையில் அகப்படாமல் உபகாரம் செய்தவன், பின் பருவம் வளர வளர அவனுக்கு அடியவர்களான எங்களுக்குத் தன்னை தராமல், அருகே வராமல் தீமை செய்கின்றாரே என்று முறையீடு செய்கின்றனர்.

Leave a comment