அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு, * மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட, * அங்கவர் சொல்லைப் புதுவை கோன் பட்டன் சொல், * இங்கிவை வல்லவர்க்கு ஏதம் ஒன்றில்லையே.
பெரியாழ்வார் திருமொழி 2.10.10
பருவத்தால் இளையராய் கிருஷ்ணன் விஷயத்தில் ஸ்னேகம் உடையவரான பெண்கள் அழகிய செந்தாமரை பூ போல திருக்கண்களை உடைய கண்ணனைப் பற்றி அவள் வீட்டிற்கு வந்து யசோதை இடத்தில் முறையிட்ட சொற்களை ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளிச் செய்த சொல்லான இவற்றை இந்த ஸம்ஸாரத்தில் இருந்து ஓத வல்லவர்களுக்கு பொல்லாங்கு அல்பமும் இல்லாதபடி போகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எம்பெருமான் விஷயத்தில் ஆசைகொண்ட பெண்கள், சிவப்பாலும் விகாசத்தாலும், செவ்வையாலும் அழகிய செந்தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனின் தீம்பு செயல்களை, கண்ணனின் வீட்டிற்கு வந்து யசோதையிடம் முறையிட்டவற்றை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளிய இந்த பாடல்களை பாடுபவர்களுக்கு சம்சாரத்தில் ஒரு குறையும் வராது என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.
Leave a comment