திவ்ய பிரபந்தம்

Home

2.10.4 தேனுகன் ஆவி செகுத்து

தேனுகன் ஆவி செகுத்து பனங்கனி, * தான் எறிந்திட்ட தடம் பெருந்தோளினால், * வானவர் கோன் விட வந்த மழை தடுத்து * ஆனிரை காத்தானால், இன்று முற்றும் * அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்.

பெரியாழ்வார் திருமொழி 2.10.4

தேனுக்காசுரனுடைய உயிரை முடித்து, ஆசுரமான பனை மரத்தின் பழங்கள் உதிரும்படி, தான் (அந்த தேனுகனை) வீசி எறிந்து, மிகவும் பெரிய தோளாலே தேவேந்தரன் ஏவ, பொழிய வந்த மழையை, மலையை எடுத்து தடுத்து பசுக்கூட்டத்தை காப்பாற்றியவனால் இன்று முற்றும்; அவற்றை உஜ்ஜீவிப்பித்தவனால் இன்று முற்றும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கழுதையான வடிவை கொண்டு தன்னை கொல்ல வந்த தேனுகன் என்ற அசுரனை முடிக்க அவனை வலிமையான தோள்களினால் சுழற்றி எரிந்த வேகத்தாலே அவன் உயிரை முடித்து, பனை மரத்தில் தூக்கி எறிந்தது, தனக்கு இடுகின்ற சோற்றை விலக்கி, மலைக்கு இடுவித்ததால், கோபம்அடைந்த தேவர்களுக்கு நிர்வாககன் ஆன இந்திரன், ஆயர்பாடி மக்களும் பசுகூட்டங்களும் கடலில் போய் விழும்படி, மேகங்களை ஏவி விட்ட கல்மழையினில் இருந்து பசுகூட்டங்களையும் மக்களையும், ‘ரக்ஷகம்’ என்று சொன்ன மலை தன்னையே குடையாக எடுத்து காத்தது என்ற சரித்திரங்களை சொல்லி, அடியவர்களை துன்பங்களில் இருந்து காத்தது பற்றி சொல்கிறார். தான் காக்கும் ரக்ஷக வர்க்கத்திற்கு மழையினால் வந்த ஆபத்தை போக்கியவன், எங்களுக்கு விரக தாபத்தை ஏற்படுத்தி, எங்களை நலிய செய்தான் என்கிறார்கள். அதனால் நாங்கள் இன்று முடிவோம் என்கிறார்கள்.

Leave a comment