திவ்ய பிரபந்தம்

Home

2.6.7 பொன்திகழ் சித்திரகூட

பொன்திகழ் சித்திரகூடப் பொருப்பினில், * உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் * கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை, * மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா * மணி வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.

பெரியாழ்வார் திருமொழி 2.6.7

(திரு அயோத்யாவில் இருப்பதைக் காட்டிலும் உகந்து எழுந்து அருளி இருக்கும்படி), சோலைகள், சுனைகள் முதலியவற்றால் உண்டான பொலிவை கொண்டு விளங்கும், சித்திரக்கூடம், என்கிற மலையின் சாரலிலே பிராட்டியின் வடிவில், (இந்திரன் மகன் ஜயந்தன்), விபரீத புத்தியாலே, (தேவ ரூபத்தை மறைத்து, பிராட்டியின் திருமேனியில் புண்படுத்த, அதனாலே பெருமாள் சீறி அருளி), சென்று உற்ற இரண்டு கண்களில் ஒரு கண்ணை பறித்து விட்ட, அப்படிப்பட்ட தன்மையை உடையவனாய் செறிந்து உள்ள மயிர் முடியை உடையவனாய், குற்றத்துக்கு ஈடாக தண்டனை கொடுக்கும் தன்மையை உடையவனான இவன், (கோல் கொண்டு வராத) உன்னை சீறி மிகுந்து இருக்கும் மற்றொரு கண்ணையும் பரிக்காதபடி விரைவாய் கோல் கொண்டு வா; நீலமணி போன்ற வடிவை உடையவனாய் பூர்ணனானவனுக்கு ஒரு கோல் கொண்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சோலைகளும், அருவிகளும், சுனைகளும் நிறைந்த சித்திரகூடத்தில், குற்ற நோக்கத்துடன் பிராட்டியை பார்த்த ஒரே காரணத்திற்காக காக்கைகளுக்கு ஒரு கண்ணை பறித்த இராமபிரான் இரண்டாவது கண்ணையும் பரிப்பதற்கு முன் மணிவண்ண நம்பிக்கு ஒரு கோல் கொண்டு வா என்று பாடுகிறார்.

Leave a comment