திவ்ய பிரபந்தம்

Home

2.6.10 அக்காக்காய் நம்பிக்குக் கோல்

அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வா என்று, * மிக்காள் உரைத்த சொல் வில்லி புத்தூர்ப் பட்டன் * ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர், * மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே.

பெரியாழ்வார் திருமொழி 2.6.10

தீம்பில் வளர்ந்த இவனுக்கு கன்று மேய்க்க கோல் தேடி கொண்டு வா என்று கண்ணனுடைய சேஷ்டிதங்களை அனுபவிக்க பெறாத தேவகி பிராட்டியை விட, அந்த அனுபவங்களினால் மேன்மை உடையவளான யசோதை பிராட்டி சொன்ன சொல்லை ஸ்ரீ வில்லி புததூருக்கு நிர்வாககர் ஆன பெரியாழ்வார், அவள் சொன்னது போல அருளிச் செய்த தமிழ் பாடல் இந்த பத்தையும் கற்க வல்லவர்கள் பகவத் அறிவிலும் பக்தியிலும் சிஷ்யர்களாய் இருக்கும் புத்திரர்களை பெற்று இந்த மண்ணுலகில் பரம ஆனந்தம் அடைந்து, களித்து இருப்பார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தேவகி யசோதை இருவரும் பூர்வ ஜென்மத்தில் தவம் செய்தவர்களாய் இருந்தாலும் தேவகி கண்ணனைப் பெற்றது மாத்திரமே, யசோதை கண்ணனின் சிறு வயது அனுபவம் முற்றிலும் பெற்றவள் ஆகையால் ஆழ்வார் இவளை மிக்காள் என்கிறார்.   ‘திருவிலேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற் றாளே’ (பெருமாள் திருமொழி 7.5) சொல்லியபடி தேவகிக்கு கிடைக்காததையும் யசோதை பெற்றதையும் சொல்கிறார்.

Leave a comment