திவ்ய பிரபந்தம்

Home

2.6.2 கொங்குங் குடந்தையும் கோட்டியூரும்

கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும், * எங்கும் திரிந்து விளையாடும் என் மகன், * சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நில் * அங்கமுடையதோர் கோல் கொண்டு வா * அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வாi

பெரியாழ்வார் திருமொழி 2.6.2

(புஷ்பங்களால்) நறுமணத்தை உடைய திருக்குடந்தையிலும், திருக்கோட்டியூரிலும், திருப்பேர் நகரிலும், மற்றுமுள்ள திருத்தலங்களிலும், பரந்து திரிந்து விளையாடும் என் பிள்ளை உடைய ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை பிடித்துக் கொண்டு இருக்கின்ற விசாலமான திருக்கைக்கு தகுந்தாக இருக்கும் நல்ல வடிவை உடைய ஒரு கோல் கொண்டு வா; அரக்கு பூசப்பட்டு இருக்கும் ஒரு கோல் கொண்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சோலைகளிலும் ஓடைகளிலும் உண்டான நறுமணம், உள்ளே கண்வளர்ந்து இருக்கின்றவனுடைய திருமேனியின் நறுமணமும் சேர்ந்து திருக்குடந்தை, திருக்கோட்டியூர், திருப்பேர் நகர் முதலிய ஊர்களில் பரவி, ஊர் முழுவதும் நறுமணம் வீசுவதை சொல்கிறார்.

நல்ல மணம் பொருந்திய திருக்குடந்தை, திருக்கோட்டியூர் திருப்பேர்நகர் மற்றும் பல இடங்களிலும் திரிந்து விளையாடும் சங்கம் பிடிக்கும் என் மகனுக்கு தக்க ஓரு நல்ல அரக்கு நிறம் கொண்ட கோல் கொண்டு வா என்று அழைக்கிறார்.

Leave a comment