உந்தி எழுந்த உருவ மலர் தன்னில், * சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் * கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி, * தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக் காக்காய் * தாமோதரன் தன் குழல் வாராய் அக் காக்காய்.
பெரியாழ்வார் திருமொழி 2.5.8
திரு நாபியில் உண்டான அழகிய தாமரை மலரில், (ஞான சக்திகளால் வந்த) அழகினை நிருபகமாக உடைய நான்முகனான பிரம்மாவை படைத்தவனுடைய, நெருக்கமாக உள்ள திருகுழலை புனுகு வார்த்து ஊறைக்கத் தடவி தந்தத்தால் செய்யப்பட்ட சீப்பாலே குழல் வாராய் ; தாமோதரனுடைய குழல் வார வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
“வெண்ணெயளைந்த குணுங்கும்” என்ற பாடலில் கூறியபடி யசோதை, கண்ணனை எண்ணெய் தேய்த்துப் புளிப் பழம் கொண்டு நீராட்டியதனால், அவனுடய கூந்தல் ஒட்டி இருக்கும். ஆதலால், ‘காக்கையே! அந்த சிக்கு போகும் வண்ணம் புனுகு தடவித் தந்தச் சீப்பினால் தலை வார வேண்டும்’ என்கிறாள். அபலையான எனக்கு பிடித்துக் கட்டலாம்படி சுலபனாக இருக்கிறவனுடைய குழலை வார வாராய் என்று அழைக்கிறாள்.
Leave a comment