திவ்ய பிரபந்தம்

Home

2.5.7 பிண்டத் திரளையும்

பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச்சோறும் * உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே, * அண்டத்து அமரர் பெருமான் அழகமர் * வண்டு ஓத்த இருண்ட குழல் வாராய் அக் காக்காய் * மாயவன் தன் குழல் வாராய் அக் காக்காய்.

பெரியாழ்வார் திருமொழி 2.5.7

பித்ராதிகளைக் குறித்து இடுகிற பிண்டங்களாகிற திரளையும், பிசாசங்களை குறித்து இட்ட நீரோடு சேர்ந்த சோறுகளையும் உண்கைக்கு ஆசைப்பட்டு, நீ அதுக்கு இடம் தேடி தட்டி திரியாமல் நித்ய விபூதியில் இருக்கின்ற நித்ய சூரிகளுக்கு அதிபதியாக இருப்பவனுடைய அழகு பொருந்தி இருக்கும் வண்டு போல் கறுத்து இருக்கும் குழலினை வார நீ வாராய், ஆச்சரிய சக்தி உடையானவான குழல் வார வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தந்தை தாய் முதலானார் இறந்த திதியில் செய்யும் ஸ்ரார்தத்தில் பித்ரு தேவதைகளை அழைத்து பிண்ட உருண்டையைக் காகத்தை அழைத்து இடுவதும், பிசாசு முதலியவற்றைக் குறித்து ஜலத்தோடு கூடிய சோற்றைப் பலி கொடுத்தலும் வழக்கம். அங்கெல்லாம் அலைந்து திரியாமல், மேல் உலகத்து தேவர்களுக்கு தலைவனான இந்த கண்ணனுக்கு அழகிய கூந்தலை வார இங்கு வாராய் என்று காக்கையை இங்கே அழைக்கிறார்.

Leave a comment