திவ்ய பிரபந்தம்

Home

2.5.10 கண்டார் பழியாமே

கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன், * வண்டார் குழல் வார வா வென்ற ஆய்ச்சி சொல், * விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல் * கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே

பெரியாழ்வார் திருமொழி 2.5.10

அக்காக்காய், கண்டவர்கள் பழி சொல்ல முடியாதபடி, நீல மேக வர்ணானவனுடைய, மதுவை குடிப்பதற்காக வண்டுகள் படிந்து இருக்கின்ற திருக்குழலை வாருவதற்கு வா என்று சொல்லி அழைத்த யசோதை பிராட்டியின் சொற்களை, ஆகாயத்தின் அளவு மதிள்களை உடைய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் அருளி செய்த இந்த பதிகத்தை சப்த, அர்த்தங்களை புகழ்ந்து கொண்டு பாடும் அளவில், வினை என்று பெயர் பெற்றவை எல்லாம் அவர்கள் அருகில் வர மாட்டாது என்று சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

நீராடிய பின்பு தலையை வாராமல் இருந்தால், கண்டவர்கள் எல்லாம் பழிப்பார்கள். நல்வினையும் தீவினை போலவே ஸம்ஸார பந்தத்தில் இருந்து விலக முடியாமல் இருப்பதால் மோக்ஷம் வேண்டுபவர்கள் எல்லா வினைகளையும் நீக்க வேண்டும் என்று கருதி பன்மையில் அருளிச் செய்தார்.

Leave a comment