திவ்ய பிரபந்தம்

Home

2.4.7 கறந்த நற் பாலும் தயிரும் கடைந்து

கறந்த நற் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய், * பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரானே, * சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே * மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சன மாட நீ வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.4.7

என் நாயகனே, நீ பிறந்தது முதல் சரியான நேரங்களில் கறக்கப்பட்ட நல்ல பாலையும், தயிரையும் கடைந்து உறி மேல் வைக்கப்பட்ட வெண்ணையையும் நான் பெற்றதே இல்லை; பிள்ளை மேல் குற்றம் உண்டாலும், மறைக்க வேண்டும் என்று பிரியம் உடைய தாயானவள் செய்வது போல, நானும் பழி சொல்ல மாட்டேன் என்கிறாள். (அப்படி உன் மேல் பழி சொன்னால், ஊரார், ‘ பெற்ற அன்னையே இவன் மேல் குற்றம் சொன்னால், இவன் எவ்வளவு தீம்பனாக இருப்பான் என்று அயலார் சொல்லக் கூடும் என்பதால்) அயலார் முன்னே ஞாபகம் தவறியும் கூட வாய் விட மாட்டேன் ; மஞ்சம் ஆட நீ வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

Leave a comment