திவ்ய பிரபந்தம்

Home

2.4.5 அப்பம் கலந்த சிற்றுண்டி

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து, * சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறிதியேல் நம்பீ, * செப்பு இள மென் முலையார்கள் சிறு புறம் பேசிச் சிரிப்பர் * சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.4.5

பூரணமானவனே, தாயான நான், அப்பத்தோடு சேர்ந்த சிற்றுண்டியை பாலிலே கருப்புக்கட்டியை (கல்கண்டு) இட்டு பிசைந்து நன்றாக பக்குவமாக செய்து வைத்தேன்; அவற்றை அமுது செய்ய விருப்பு கொண்டாயானால் நன்றாக திருமஞ்சனம் கொண்டு அருள வேண்டும். (நீ நீராடாமல் இருந்தால்), செப்பு போன்ற இளையதாய் மிருதுவான முலையை உடையவர்கள் தங்களுக்கு தோன்றியவைகளை காணாத இடங்களில் சொல்லி பரிகசித்து கொண்டு இருப்பார்கள்; நாயகனே, உன்னை தொழுகிறேன்; (அவர்கள் பரிகாசத்திற்கு இடம் கொடுக்காமல்) இங்கே வர வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணன் அழுக்கு உடம்புடன் இருக்கிறான் என்று இடைச்சிகள் திட்டுவதற்கு இடம் கொடுக்காதபடி நீராட வரவேண்டும், வந்தால், வேண்டிய இனிப்பு பஷணங்கள் தருவேன் என்கிறார்.  

Leave a comment