திவ்ய பிரபந்தம்

Home

2.3.13 வார் காது தாழப் பெருக்கி

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழையிட வேண்டி, * சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ, * பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன * ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே.

பெரியாழ்வார் திருமொழி 2.3.13

இயல்பாகவே நீண்டு இருக்கிற காதானது தாழும்படி பெருக்க செய்து அளவிலே அமைத்து மகர குண்டலங்களை ஸாத்த ஆசைப்பட்டு சீர்மையோடு யசோதை பிராட்டி ஸ்ரீயின் பதியானவனை குறித்து சொன்ன சொற்களை தம் திருவுள்ளத்தில் சர்வ காலமும் நின்று விளங்கும்படி பூமி எங்கும் நெடுங்காலமாக கீர்த்தியை உடைய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் எம்பெருமானின் திருநாமங்கள் பன்னிரெண்டையும் அருளி செய்ததோடு அனுபவித்து முடிக்க முடியாததை அந்தாதியான மேல் சொன்ன பன்னிரெண்டு பாடல்களையும் ஓதவல்லவாகள், அடியவர்களை எப்போதும் நழுவ விடாதவனுக்கு (அச்சுதன்) என்றும் அந்தரங்க கைங்கர்யம் செய்யும் பெருமை உடையவர்கள் ஆவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இதனைச் சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment