திவ்ய பிரபந்தம்

Home

2.3.11 கண்ணைக் குளிரக் கலந்து

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடிகமழ் பூங்குழலார்கள், * எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே, * உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக்கிடுவன், * பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.3.11

பரிமளம் வீசுகின்ற பூக்கள் அணிந்த கூந்தலை உடைய பெண்கள், தங்கள் கண் குளிரும்படி உன்னுடைய அவயவங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து உன்னோடு கலக்க வேண்டும் என்ற நினைவில், என்றும் பொருந்தி இருந்து அவர்களுக்கு போக்கியனாக நின்ற பெருமையை உடையவனே, எங்களுக்கு அமிர்தமானவனே, சகடாசுரனை கட்டுக்குலையும் படி உதைத்த பத்மநாபனே, நீ அமுது செய்ய பழங்கள் கொடுப்பேன்; சற்றும் நோவாதபடி உன காதுகளுக்கு பூஷணம் இடுவேன்; அதற்கு இசைந்து வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

உன்னுடைய கண்ணை அவர்களது கண்களுடன் குளிர கலந்ததை சொல்கிறார். அவர்களுடைய நெஞ்சுக்குள் சர்வ காலமும் இருந்து ரசிக்கும் பெரியவனே, என்கிறார்.

உண்ணக் கனிகள் தருவன் (பெரியாழ்வார் திருமொழி 2.4.6) என்றும் மீண்டும் இந்த ஆழ்வார் திருமஞ்சனத்திற்கு அழைக்கும் போதும் பாடப் போகிறார்.

Leave a comment