அம் கமலப் போதகத்தில் அணிகொள் முத்தம் சிந்தினாற் போல், * செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே, * அங்கமெல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம * அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலையுணாயே.
பெரியாழ்வார் திருமொழி (2.2.9)
ஸ்வாமி, அழகிய தாமரைப் பூவினிடத்தில் அழகிய முத்துக்கள் சிதறினால் போல செந்தாமரை மலர் போன்ற முகமானது சிறு வியர்வைகள் அரும்புமபடி இந்த முற்றத்தின் உள்ளே நின்று தீம்புகளை செய்து புழுதி ஆகும்படி நிரந்தரமாக புழுதியினை அள்ளாதே ; துர்வாச முனிவர் சாபத்தால் வருந்தின அக்காலத்திலே தேவர்களுக்கு அமிர்தத்தை கடைந்துஎடுத்து கொடுத்த தேவாதி ராஜனே, முலை உண்ணாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தேவர்களுக்கு அமுது கொடுத்து உதவி செய்தவனே, இப்போது முலை உண்டு எனக்கு உபகாரம் செய் என்கிறாள்.
Leave a comment