திவ்ய பிரபந்தம்

Home

2.2.11 வாரணிந்த கொங்கை ஆய்ச்சி

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம், * நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர், * பாரணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார், * சீரணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே.

பெரியாழ்வார் திருமொழி 2.2.11

கச்சாலே அலங்கரிக்கப்பட்ட முலைகளை உடைய தாயாரான யசோதை பிராட்டி, ‘மாதவா, ஸ்ரீயின் பதியே, முலை உண் ‘ என்று சொன்ன வார்த்தையை, நீருக்கு அலங்காரமாக அலர்ந்த செங்கழுநீர் பூவின் வாசனையானது ஒருபடிப்பட பரிமளித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாககராய், பூமி முற்றிலும் நீண்ட காலமாக புகழ் உடைய பிராமணர்களில் உத்தமரான பெரியாழ்வார் அருளி செய்த பாட்டுக்களை ஓதவல்லவர்கள், கல்யாண குணங்களில் முழுமையானவனாய், நீர்மைக்கும் மேன்மைக்கும் பிரகாசமான சிவந்த கண்களை உடையவனாய், அடியவர்கள் இடத்தில் ஆசை உடையவனான எம்பெருமான் விஷயத்தில் சென்ற மனத்தினை உடையவர்கள் ஆவார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

கிருஷ்ணனின் போக்கியத்திற்கு உள்ள முலைகள் பிறர் கண் படாதபடி கச்சாலே சேமித்து கொண்டு திரிகையாலே, அலங்காரமான முலை உள்ள ஆச்சி என்று சொல்லுகிறார்.

Leave a comment