திவ்ய பிரபந்தம்

Home

2.2.8 இரு மலை போல் எதிர்ந்த மல்லர்

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவரங்கம் எரி செய்தாய் உன் * திரு மலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி, * ஒரு முலையை வாய் மடுத்து, ஒரு முலையை நெருடிக் கொண்டு, * இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே.

பெரியாழ்வார் திருமொழி 2.2.8

இரண்டு மலைகள் போல் மல் யுத்தம் செய்வதற்காக எதிர்த்து வந்த சாணூர, முஷ்டிகர் என்ற இரண்டு மல்லர்களுடைய சரீரத்தை பயம் என்ற அக்னியால் எரிந்து விழும்படி செய்தவனே, உன்னுடைய அழகு மிகுந்து விளங்குகின்ற மார்பானது முலைபாலாலே நிறையும்படி என் மடியில் வந்து ஏறி ஒரு முலையை திருப்பவளத்தில் வைத்து மற்றொரு முலையை திருக்கையாலே நெருடிக்கொண்டு இரண்டு முலைகளையும் மாறி மாறி நடுவே நடுவே இளைத்து இருந்து உண்ண வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மேலும் திரு என்பது பிராட்டியை சொல்வதாய், அவளே எழுந்திருந்த திரு மார்பு என்பதால் மிகவும் சிறப்பாக விளங்கியதை சொல்கிறது.

Leave a comment