பெண்டிர் வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுதும் என்னும் ஆசையாலே, * கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி, * வண்டு உலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டி, * கொண்டுபோவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலையுணாயே.
பெரியாழ்வார் திருமொழி 2.2.7
தம் தம் கணவர்களுக்கு மனைவியாய் வாழ்கின்ற உன்னை பார்த்த பெண்கள், உன்னை போன்ற நல்ல குழந்தைகளை பெற வேண்டும் என்ற ஆசையாலே உன்னை விட்டு பிரிய மாட்டார்கள்; வண்டுகள் படிந்து உலாவும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குழலை உடைய பெண்கள், தங்கள் கண்களாலே உன் திருமேனியின் முழு அழகினையும் உன் வாய் அமுதம் உண்ண விரும்பி, வேண்டி, உன்னை கொண்டு போவதாக வந்து நின்றார்கள். ஆதலால் சர்வ சுலபனான கண்ணா, நீ முலை உண்ணாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பெண்டிர் வாழ்வார் என்று சொன்னது பெண்கள் தங்கள் கணவருடன் குழந்தைகளுடன் வாழ்வார்கள் என்பதாகும்.
வண்டு உலாம் என்று சொன்னது, பெரிய காற்றுக்கு அகப்படாமல், கரையின் இருந்து உலாவுவார் போலே, அதிக மது இருப்பதனால், அதனுள் அழுந்தாமல், பூக்களின் மேலே சஞ்சரிப்பததை சொல்கிறார்.
கலக்க நோக்கு என்று சொன்னது, ஓரத்தில் நின்று உற்று பார்க்கை மட்டும் இல்லாது, திருமேனி எங்கும் உற்று பார்ப்பது என்கிறார்.
Leave a comment