திவ்ய பிரபந்தம்

Home

2.1.8 கொங்கை வன் கூனி சொற்கொண்டு

கொங்கை வன் கூனி சொற்கொண்டு குவலயத் * துங்கக் கரியும் பரியும், இராச்சியமும், * எங்கும் பரதற்கு அருளிவன் கான் அடை * அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பெரியாழ்வார் திருமொழி 2.1.8

முதுகிலே முலை புறப்பட்டது போல கிளர்ந்ததாய், வலிய, கூனை உடைய மந்தாரையின் வார்த்தையைக் கொண்டு பூ மண்டலத்தில் உள்ள யானைகளுக்குள் உயர்ந்து இருப்பதான யானைகளையும் குதிரைகளையும், இராஜ்யத்தையும் எழுந்தருளப்போகும் காட்டினையும் பரதாழ்வானுக்கு கொடுத்து ஒருவராலும் புகுதற்கு அரியதான காட்டை அடைந்த அழகிய கண்களை உடையவன் அப்பூச்சி காட்டுகின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பித்ரு / தந்தை வசனம் கேட்டு ராமன் காட்டுக்கு சென்றாலும், கூனியின் வசனத்தால், ‘கலக்கியமா மனத்தனளாய்க் கைகேசி வரம்வேண்ட‘ (பெரியாழ்வார் திருமொழி 3.10.3) என்றபடி, கைகேயி மனம் கலங்கப்பெற்று வரம் வேண்டியதால், கூனி வசனம் கேட்டு இராமன் காட்டுக்கு சென்றான் என்று சொல்லப்பட்டது. கட்டின காப்போடு காட்டிற்கு போக சொன்ன இடத்தில், முகத்தில் சிறுது மாற்றமும் இன்றி, முடியை தவிர்த்து, ஜடையை புனைந்து நாட்டை விட்டு காடேறப் போனபடியால் ‘அழகிய சுலபன் ‘ என்கிறார். அது மட்டும் அல்லாமல், ‘ராஜ்ஜிய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டிற்கு போகிறோம்’ என்று ஒரு கிலேசமும் இல்லாத மனத்தினை அழகிய கண்களில் காண்பித்து செல்கிறான் என்றும் சொல்கிறார்.

கூனியின் சொல் கேட்டு, சிறந்த யானைகளும் குதிரைகளும் உடைய ராஜ்ஜியத்தை பரதனுக்கு அருளி கொடுமையான காட்டிற்கு சென்ற ராமபிரானாகிய கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் என்று பாடுகிறார்.

Leave a comment