சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு, * ஆப்பூண்டு நந்தன் மனைவி, கடை தாம்பால், * சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று, * ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பெரியாழ்வார் திருமொழி 2.1.5
எருதுகள் கட்டப்பட்டு வலிக்கப்பட்ட சகடத்தை (சகடாசுரனை) உதைத்து, நெய்க்கு ஆசைப்பட்டு, களவு கண்டு, இடைச்சிகளால் கட்டப்பட்டு நந்தகோபருடைய பத்தினியான யசோதைப் பிராட்டி, கடைகிற கயிற்றால் மிகவும் துடிக்கும்படி அடிபட்டு, அப்போது கட்டுண்டு இருந்தவன் இப்போது அப்பூச்சி காட்டுகின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எருதுகள் கட்டுதற்கு உரிய சகடத்தின் மேல் சகாடசுரன் என்ற அரக்கன் பிரவேசித்து இருந்ததை அறிந்து அந்த சகடத்தை உரு தெரியாமல் சிதைக்கும்படி உதைத்தவனும், நெய்க்கு ஆசைபட்டு, திருடி, பிடிபட்டு, நந்தகோபன் மனைவி, யசோதை தயிர் கடையும் தாம்பினால் துடி துடிக்க அடிபட்டு, அதனால் கட்டப்பட்டவனும், அப்பூச்சி காட்டுகின்றான் என்று பாடுகிறார்.
Leave a comment